சனி, 10 மார்ச், 2018

இஞ்சி பூண்டு பேஸ்ட -3 மாதம் வரை கெடாமல் பாதுகாப்பது எப்படி?

தேவையான பொருள்கள்:
           இஞ்சி -500கி
           பூண்டு -750கி
          உப்பு -3 ஸ்பூன்
         சமையல் எண்ணெய் - 4ஸ்பூன்
        கண்ணாடி(அ) ப்ளாஸ்டிக்  பாட்டில்- 2

செய்முறை;
                   
                    இஞ்சி,பூண்டு இரண்டையும் நன்றாக கழுவி தோல் நீக்கி சுத்தம் செய்து  கொள்ளவும்.

தோல் நீக்கிய இஞ்சி,பூண்டை சிறிய துண்டுகளாக நறுக்கி அதை மிக்ஸி ஜாரில் போட்டு  நன்றாக மை  போல் அரைத்து கொள்ளவும்.

                ஒரு கடாயில் உப்பை  போட்டு மிதமான தீயில் உப்பின் நிறம் மாறாமல்  சூடு பதம் வரும் வரை வறுத்து தனியே எடுத்து தட்டில் ஆற வைக்கவும்.

     பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்த இஞ்சி ,பூண்டு விழுதை  போட்டு சூடுபடுத்தவும்.

      இஞ்சி,பூண்டு விழுதின் ஈரப்பதம் குறைந்து ,விழுதானது சடசடவென சப்தம் வரும் வரை சூடுபடுத்திய பின் நன்றாக ஆறவைக்கவும்.

              சூடுபடுத்தி ஆறிய விழுதில் வறுத்த உப்பை போட்டு கலந்த பின்னர் ,விழுதை இரண்டு பாட்டில்களில் தனி தனியே போட்டு  வைத்துக் கொள்ளவும்.

            ஒரு பாட்டிலை ப்ரிட்ஜின் பரீசரிலும், மற்றுமொரு பாட்டிலை ப்ரிட்ஜின் காய்கறி வைக்கும்  பாகத்தில் வைத்து தேவைப்படும் நேரங்களில் பயன்படுத்தி  கொள்ளலாம்.
                             
 
குறிப்பு:
                இஞ்சி, பூண்டின் நிறம் பச்சையாக மாறும் காரணங்கள்:

       1.        இஞ்சி,பூண்டு சிறிது கூட தோல் இல்லாமல் உரித்து பயன்படுத்த வேண்டும்.

  2.   அரைத்து பதப்படுத்திய இஞ்சி ,பூண்டு விழுதில்  தேவைப்படும் சமயங்களில் மட்டுமே கரண்டியை உபயோகப்படுத்த வேண்டும்.
 
    தேவைப்படாத சமயங்களில் கரண்டியை இஞ்சி,பூண்டு விழுதில் போட்டு வைத்தால் விழுதின் கலர் பச்சையாக மாற வாய்ப்புகள் அதிகம்.

     இஞ்சி, பூண்டை தோல் நீக்கியவுடனே அரைத்து பேஸ்ட் தயாரிக்க வேண்டும். இல்லையென்றால் விழுதின் கலர் மாற வாய்ப்புகள் அதிகம் அதிகமே.

     இஞ்சி,பூண்டை அரைக்கும்போது சிறிதும் தண்ணீர் சேர்க்கவே கூடாது.



                

புதன், 7 மார்ச், 2018

வீட்டிலேயே சிக்கன் 65 மசாலா தயாரிக்கலாம்!

தேவையான பொருட்கள்:

1.காய்ந்த சிகப்பு மிளகாய் -10
2.காஷ்மீர் மிளகாய் - 25
3.கொத்தமல்லி விதை - 2 ஸ்பூன்
4.சோம்பு - 1  ஸ்பூன்
5.சீரகம்.  -  1 ஸ்பூன்
6.பட்டை -  2 (  ஒரு இஞ்ச் அளவு)
7.கிராம்பு -  5
8.அன்னாசி பூ - 3
9.ஏலக்காய் - 4
10.சாதிபத்தி்ரி - 2
11.மைதா மாவு  - 75 கி
13.அரிசி மாவு - 50 கி
14.கார்ன்ப்ளார் மாவு - 100 கி
15.பிரியாணி இலை - 2
16.உப்பு - தேவையான அளவு


செய்முறை:
       
                         

           

1. அடுப்பில் கடாய் வைத்து சிறு தீயில்  காய்ந்த மிளகாய், காஷ்மீர் மிளகாய் இவற்றை கருகாமல் வாசம் வரும் வரை சிவக்க வறுக்க வேண்டும்.

2.அவற்றை வேறு ஒரு. காய்ந்த ஈரமில்லாத தட்டில் மாற்றி விட்டு , அடுத்து மல்லி, சீரகம்,  சோம்பு  போன்றவற்றை வறுத்து அவற்றை மிளகாய் உள்ள தட்டில் மாற்றவும்.

3. பிறகு பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரியாணி இலை, சாதிபத்திரி  இவையனைத்தையும் வறுக்கவும். பின் ஏற்கனவே வறுத்து வைத்த பொருட்களோடு ஒன்றாக சேர்க்கவும்.

4.பிறகு மாவு வகைகள் அனைத்தையும் ஒன்றாக வறுக்கவும் .

5.பின்னர்    தேவையான அளவு   உப்பை வறுத்த பின் உப்பை தனியொரு பாத்திரத்தில்  மாற்றி ஆற வைக்கவும்.

                                 

6.வறுத்து வைத்த பொருட்கள் அனைத்தும் நன்றாக ஆறியதும்     உப்பை தவிர அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும்.

7. இதற்கு பின்னர்  அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப   உப்பை   அரைத்து வைத்த மசாலாவில்  சிறிது சிறிதாக சேர்த்த பின்னர் மீண்டும் ஒரு நிமிடம் மட்டுமே மசாலாவை அரைக்க வேண்டும்.

8.சரியான அளவில், ருசிக்கு ஏற்ற வகையில் உப்பு  சேர்ந்துள்ளதா என சரி பார்த்த பின் அரைத்த மசாலா பவுடரை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றவும்.
 
 
                               
9.இப்பொழுது சுவையான, நல்ல மணத்துடன் ,கெமிக்கல், கலப்படம் இல்லாத சிக்கன் 65  மசாலா தயார்.

10.காஷ்மீர் மிளகாய் அதிக அளவில் பயன்படுத்துவதால் மசாலாவின்  கலர் நல்ல சிவப்பு நிறத்துடனும், கார தன்மை குறைவுடனும்  காணப்படும்.





செவ்வாய், 6 மார்ச், 2018

இட்லி மிளகாய் பொடி தயாரிப்பது எப்படி?

தேவையான பொருள்கள்:

1.உளுந்து -200 கி
2.கடலை பருப்பு - 100 கி
3.எள்  -  3 ஸ்பூன்
4.காய்ந்த மிளகாய் - 20
5. பொட்டு கடலை(அ) பொரிகடலை  -  20 கி
6.தேங்காய் - 5 ஸ்பூன்
7.புலுங்கல் அரிசி(அ) சாப்பாடு அரிசி - 50 கி
8. கட்டி பெருங்காயம் - சிறிதளவு
9.வெள்ளை பூண்டு -8  பெரிய பல்
10.உப்பு -தேவையான அளவு
11.கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு

செய்முறை;

                                     

                    அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி முதலில் தேங்காயை நன்றாக சிவப்பாக மாறும் வரை வதக்க வேண்டும். 
   
             2.பிறகு பூண்டை ஒன்றிரண்டாக  நசுக்கி கடாயில்   போட்டு  வதக்க  வேண்டும்.
    
         3.பிறகு அரிசி, எள் ,உளுந்து, கடலை பருப்பு ,  பொரிகடலை, காய்ந்த மிளகாய் , கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு  என்ற வரிசையில் ஒவ்வொன்றாக  தனி தனியாக கருகி விடாமல்  சிவக்க வறுத்து  ஒரு தட்டில் வைத்து ஆற வைக்கவும்.  
            4.    பின் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.
 


                                 
      இப்பொழுது சுவையான இட்லி மிளகாய் பொடி தயார்.
          

வியாழன், 1 மார்ச், 2018

வீட்டிலேயே ginger powder தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்:

இஞ்சி -100 கி

செய்முறை;
               
              1.     இஞ்சியை நன்றாக கழுவி உலர வைத்த பின் கத்தியை பயன்படுத்தி தோலை சீவி சுத்தம் செய்யவும்.
2.பிறகு கேரட் ,வாழைக்காய் போன்றவை துருவ பயன்படுத்தும் உபகரணத்தால் இஞ்சியை நன்றாக துருவிக் கொள்ளவும்.
3.துருவிய இஞ்சியை ஒரு தட்டின் மேல் வெள்ளை துணியை போட்டு அதன்மேல் இஞ்சியை வைத்து நன்றாக பரப்பி வெயிலில்   காய வைக்கவும் .
 4.இஞ்சி நன்றாக ஈரப்பதமில்லாமல் சருகு போன்ற பக்குவத்தில் காய்ந்த பின்  அதனை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.
5. அரைத்த பவுடரை மாவு சலிப்பானால் சலித்து அதை ஒரு காற்று புகாதா டப்பாவில் அடைத்து  பயன்படுத்தி கொள்ளவும்.

இஞ்சி பவுடர் பயன்படும் விதம்;

         1.     உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் இஞ்சி பவுடர் 1/2 ஸ்பூன்,தேன் 1ஸ்பூன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளலாம்.
          2.இஞ்சி டீ குடிக்க விரும்புபவர்கள் பாலில் டீத்தூள், சீனியுடன் ,இஞ்சி பவுடர் சிறிதளவு சேர்த்து சுவையான இஞ்சி டீ பருகலாம்.
         3.சிக்கன் 65 மசாலா, மேகி மசாலா போன்றவை  வீட்டிலேயே தயாரிக்கும் போது  இஞ்சி பவுடர் பயன்படுகிறது.

முடி கொட்டும் பிரச்சனைக்கு 30 நாட்களில் தீர்வு தரும் ஆளி விதை ஜெல்

ஆளி விதையை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஜெல்லை தலையில் தடவி மசாஜ் செய்து வந்தால்  உச்சந்தலையில் உள்ள மயிர்க்கால்கள் தூண்டப்பட்டு இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.மேலும் இது மயிர்க்கால்களை வலுப்படுத்தி ,மயிர்க்கால்களில் உள்ள அடைப்புகளை நீக்கி ,முடி கொட்டுதலை தடுத்து இயற்கையான முறையில் அடர்த்தியான முடியை  பெற உதவுகிறது.ஆளி விதையில் உள்ள ஒமேகா 3பேட்டி ஆசிட் , முடியின் வறட்சி தன்மையையும், முடியின்  ஊட்டச்சத்து குறைபாட்டையும் சரி செய்து ,முடி உதிர்வை கட்டுப்படுத்தி ,முடியினை நீண்டு வளர செய்கிறது.ஆளி விதை ஜெல்லானது முடி உதிர்வை சரி செய்வதுடன் ,பொடுகை  கட்டுப்படுத்தி, தலையில் ஏற்படும் வழுக்கை பிரச்சினையையும் சரி செய்கிறது.மேலும் இந்த ஜெல்லானது முடி வளர்ச்சி குறைபாட்டின் ஒழுங்கற்ற தன்மைகளான பொடுகு ,வறட்சி,நுனி பிளவு போன்றவற்றிற்கு நிரந்தர தீர்வாக அமைகின்றது.                                                                                                                   ஆளி விதை ஜெல் தயாரிக்கும் முறை:                                                                                       தேவையான பொருட்கள்;
 
ஆளி விதை -1/2 கப்
தண்ணீர்-2கப்

            ஒரு பாத்திரத்தில் 2கப் தண்ணீருடன்  1/2கப் ஆளி விதையை  சேர்த்து குறைந்த தீயில் 3 நிமிடம் வரை நன்றாக கொதிக்க வைக்கவும். இந்த கலவை நன்றாக கொதிக்கும் போது அதிலிருந்து முட்டையின்  வெள்ளை கருவை போன்றதொரு ஜெல் உருவாகும். இந்த நிலையில்  வடிகட்டியை பயன்படுத்தி அந்த ஜெல்லை வேறொரு பாத்திரத்தில் வடிகட்டவும். ஜெல் நன்றாக ஆறிய பின்
அதை ஒரு டப்பாவில் அடைத்து  ஒரு மாதம் வரை ப்ரிட்ஜ்ல் வைத்து  உபயோகிக்கலாம்.

பயன்படுத்தும் முறை:
     ஜெல் -4 கரண்டி
    தேங்காய் எண்ணெய் - 4 கரண்டி    
   
    ஒரு பவுலில்  ஜெல்லையும் ,தேங்காயெண்ணையும் சம பங்கெடுத்து நன்றாக கலக்கி  தலையில் நன்றாக தடவி மசாஜ் செய்யவும். மேற்கூறிய அனைத்தும் எனது அனுபவத்தில் நான் அடைந்த அனுபவ பலன். 

திங்கள், 9 ஜனவரி, 2012

Tamil Kolaveri HD (Jaffna Version)

என் தமிழ்மொழி மேல் உனக்கு ஏனிந்த கொல வெறிடா...
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா........